fbpx
Homeபிற செய்திகள்சர்தார் வல்லபாய் படேல்  கல்லூரியின் ஃபேஷன் ஷோ கண்காட்சி கொண்டாட்டம்

சர்தார் வல்லபாய் படேல்  கல்லூரியின் ஃபேஷன் ஷோ கண்காட்சி கொண்டாட்டம்

கோயம்புத்தூர் விழாவின் 18வது இன்ஃபினிட்டி பதிப்பின் ஒரு பகுதியாக, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி (SVPISTM) ஃபேஷன் கண்காட்சியான ‘Texcitement’25’ ஐ கொண்டாடியது.  இந்நிகழ்ச்சியில் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் ஃபேஷன் ஆர்வலர்களால் “ஸ்டைலில் நிலைத்தன்மை” என்ற கருப்பொருளின் கீழ் உருவாக்கப்பட்ட கரிம, மறுசுழற்சி செய்யப்பட்ட மற்றும் மறுபயன்பாட்டு பொருட்களால் செய்யப்பட்ட அற்புதமான ஆடைகலின் அணிவகுப்பு நடைபெற்றது.

தலைமை விருந்தினர், அப்ரோடைட்ஸ் டிரேப்பின் உரிமையாளர் சண்முகப்ரியா,

நடுவர் மன்ற உறுப்பினர்கள்  ஹீனா கோடேச்சா மற்றும் டாக்டர் ஆர். சங்கீதா ஆகியோர் நெறிமுறை மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள ஆடை வடிவமைப்புகளை  ஊக்குவிப்பதில் நிறுவனத்தின் முயற்சிகளைப் பாராட்டினர்.

பல்லவா குழுமம் மற்றும் மகாசக்தி குழுமம் கோல்டன் ஸ்பான்சர்களாக ஆதரவு அளித்த இந்த நிகழ்வு, வடிவமைப்பாளர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள், ஃபேஷன் தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களை ஈர்த்தது.

மேலும் கல்லூரி மாணவர்களின் சிறப்பு விளக்கக்காட்சி மற்றும் உற்சாகமான பரிசு வழங்கும் விழா ஆகியவை மாலையின் உற்சாகத்தை மேலும் அதிகரித்தன.

2025 ஆம் ஆண்டு கோவை விழாவின் சிறப்பம்சங்களில்  ஒன்றாக Texcitement ’25 மலர்ந்தது.

படிக்க வேண்டும்

spot_img