நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் கூடலூரில் நடைபெற்ற விழாவில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் 13,173 பயனாளிகளுக்கு ரூ.9.85 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் ஆ.ராசா எம்.பி பேசியதாவது: நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்திற் குட்பட்ட பகுதியில் கடந்த ஒன்னரை மாதத்திற்குள் அடுத்த திட்டம் தயாரிக்கப்பட்டு இரண்டு முறை இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வெவ்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகள் கண்டறியப் பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மாதந்தோறும் ரூ.11.60 கோடி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் மூலம் சுமார் 25,000 நபர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என கருதப்படுகிறது. இதில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் இத்திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
பெற்றோர் இல்லாத குழந்தைகள் மற்றும் பெற்றோரால் பராமரிக்க முடியாத சூழலில் உள்ள குழந்தைகளுக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், மாதந்தோறும் ரூ.2,000/-வழங்கும் அன்புக்கரங்கள் என்ற திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்து செயல்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு கூறினார்.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில், மகளிர் திட்டம் சார்பில் 12,000 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடை யாள அட்டைகளையும், ஊரக பகுதிகளில் 49 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.4.89 கோடி மதிப்பிலும், நகர்புற பகுதிகளில் 30 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 2.62 கோடி மதிப்பிலும் என மொத்தம் 79 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.7.51 கோடி மதிப்பில் வங்கிகடன் இணைப்புகளையும், பண்ணை சார்ந்த மற்றும் பண்ணை சாரா செயல்பாடுகளில் 328 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.1.14 கோடி மதிப்பில் நிதி உதவிகளும் என மொத்தம் 13,140 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.8.65 கோடி மதிப்பில் கடனுதவிகளையும், மாவட்ட பாதுகாப்பு அலகு சார்பில், அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் 5 பெற்றோர்களின் ஆதரவின்றி வாழும் குழந்தைகளுக்கு மாதந் தோறும் தலா ரூ. 2 ஆயிரம் பெறுவதற்கான ஆணைகளையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 22 பயனாளிகளுக்கு 8 கிராம் ரூ.30.51 லட்சம் மதிப்பில் தங்க நாணயம் மற்றும் திருமண நிதியுதவியும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் செயல்பட்டு வரும் பெண்களை குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், நீலகிரி பிரிமியர் லீக் ரைடு பிச் என்ற திட்டம் மாவட்ட ஆட்சித்தலைவரால் உருவாக்கப்பட்டு, மாவட் டத்தில் 16 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 6 பள்ளிகளுக்கு தலா ரூ.15,000 மதிப்பில் மாணவ, மாணவிகளுக்கு கிரிகெட் விளையாட்டு உபகரணங்களையும் ஆ.ராசா வழங்கினார்.
அதனை தொடர்ந்து, அவர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஏழுமுறம் பாடி பழங்குடியினர் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து, கூடலூர் நகராட்சிக் குட்பட்ட தோட்டமுலா பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் சிஎஸ்ஆர் சாலையில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர் பணியினையும், கூடலூர் வட்டாரம் மாக்கமுலா பகுதியில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், குழந்தைகள் மையம் (கொள்கலன் மையம் அமைத்தல்) பணியினையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மரு.ஜெயராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, கூடலூர்/நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் சக்திவேல், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அலுவலர் இந்திரா, நகர்மன்ற தலைவர்கள் பரிமளம் (கூடலூர்), நெல்லியாளம் நகர்மன்ற தலைவர் சிவகாமி, உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஜெயராணி, உதகை நகர்மன்ற துணைத்தலைவர் ரவிக்குமார், தேவர்சோலை பேரூராட்சி தலைவர் வள்ளி, ஓவேலி பேரூராட்சி தலைவர் சித்ராதேவி, திட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



