fbpx
Homeபிற செய்திகள்கோவை கொங்குநாடு மருத்துவமனையில் உடல் பருமன் கிளினிக் துவக்க விழா

கோவை கொங்குநாடு மருத்துவமனையில் உடல் பருமன் கிளினிக் துவக்க விழா

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு கோவை கொங்குநாடு மருத்துவமனையில் உடல்பருமன் கிளினிக் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் கொங்குநாடு மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் ராஜு தலைமையில், கொங்குநாடு மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் டாக்டர் பிரணவ் சக்திகுமார், டாக்டர் செல்வராஜ், எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயக் குமார், மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் டாக்டர் ரமிலா, டாக்டர் கௌரி லட்சுமி ஆகியோர் முன்னிலையில் கொங்குநாடு மருத்துவமனையின் சர்க்கரை நோய் நிபுணரும், உடல் பருமன் கிளினிக்கின் இயக்குனருமான டாக்டர் புவனபிரியா செந்தில் குமார் ரிப்பன் வெட்டி உடல் பருமன் கிளினிக்கை ஆரம்பித்து வைத்தார்.

உடல் பருமன் என்பது சர்க்கரை வியாதிக்கு மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். உடல் பருமன் என்பது வெறும் உடம்பு எடையை கொண்டோ அல்லது உடம்பு எடை மாஸ் இன்டெக்ஸ் ஐ வைத்தோ முடிவு செய்வது நன்றாக இருக்காது.

உடல் பருமன் என்பது உடம்பின் கொழுப்பு அடர்த்தி, உடம்பு நீரின் அளவு, உடம்பின் சதையின் உடைய புஷ்டி , உடம்பின் செல்களின் ஆரோக்கியம், எலும்புகளின் கனிமதிறன் இவைகளை வைத்து கணக்கிடுவது தான் சரியாக இருக்கும்.

அதற்காக ஒரு பிரத்யயேக கருவி நிறுவப்பட்டுள்ளது. இந்த கருவியின் மூலம் உடம்பில் உள்ள கொழுப்பின் அடர்த்தித் தன்மை, நீரின் அளவு, சதை யின் புஷ்டித்தன்மை, எலும் பின் கனிம உறுதித்தன்மை ஆகியவற்றை கண்டறியலாம்.

இதை கண்டறிந்து அதற்கு ஏற்ப உடம்பில் நீர் அதிகமாக இருந்தால் அதை குறைப்பதற்கும், கொழுப்பு அதிகமாக இருந்தால் அதை குறைப்பதற்கும், சதையின் புஷ்டித் தன்மை குறைவாக இருந்தால் அதை சரி செய்வதற்கும் சிகிச்சை அளித் தால்தான் இந்த உடல் பருமனை குறைக்கும் சிகிச்சை சிறந்ததாக இருக்கும்.

இந்த விதத்தில் இன்று கொங்குநாடு மருத்துவமனையில் உடல் பருமன் கிளினிக்கின் பாடி காம்போசிஷன் அனலைசர் கருவியும் நிறுவப்பட்டுள்ளது.

இதை சர்க்கரை உள்ளவர்கள், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கொங்குநாடு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜு அவர்களும் கொங்குநாடு மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் ராஜு, டாக்டர் புவன பிரியா செந்தில் குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img