fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செல்பி பாயிண்ட் திறப்பு

திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செல்பி பாயிண்ட் திறப்பு

72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு செல்பி பாயிண்டை மாவட்ட ஆட்சியர் மணிஸ் நாரணவரே திறந்து வைத்தார்.

மேலும் கூட்டுறவு வார விழாவின் முதல் நாள் நிகழ்வாக கூட்டுறவு கொடி ஏற்றுதல் மற்றும் மரம் நடுவிழா திருப்பூர் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் திருப்பூர் மண்டல இணைப்பதிவாளர் கூட்டுறவு கொடி ஏற்றி மரக்கன்றுகளை நட்டார். இவ்விழாவில் துணைப்பதிவாளர்கள் ,கூட்டுறவு சார் பதிவாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img