கோவை ஆர் எஸ் புரத்தில் இயங்கி வரும் ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 60-வது ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் ஜி.பங்கஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.
முன்னதாக சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ரோட்டரி சங்க நிர்வாகி வழக்கறிஞர் சுந்தர வடிவேலு மற்றும் பள்ளியின் தலைவர் மஹாவீர் போத்ரா ஆகி யோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கினர்.

பின்னர் அவர்கள் தேசிய கொடியையும் பள்ளியின் துணைத்தலைவர் ஸ்ரீ கமலேஷ் சி.பாப்பனா, பள்ளி பொருளாளர் நிஷாந்த் ஜெயின் ஆகியோர் நலச் சங்க கொடியையும் பள்ளியின் முதல்வர் சாம்சங், எஸ்எம்வி பள்ளி முதல்வர் ஸ்ரீ பங்கஜ் ஆகியோர் பள்ளியின் கொடியையும் ஏற்றி மரியாதை செலுத்தினர் பின்னர் மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டனர்.
இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக மாணவ மாணவிகளின் யோகா, இசைக்குழு அணி வகுப்பு, கூட்டு உடற்பயிற்சி, கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர் மற்றும் பள்ளியின் தலைவர் ஆகியோர் மாணவ மாணவிகளின் விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



