ஊட்டியில் உள்ள ஹோட்டல் ஜெம்பார்க்கில் பிரமண்டமான 100 கிலோ கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் பணி நடைபெற்றது. இந்த கலவையின் போது முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம், செர்ரி, பேரீச்சை பழம் மற்றும் உயர் ரக மதுபானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கலக்கப்பட்டன. கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஓரிரு தினங்கள் வரை இந்த கலவை ஊறி நறுமணமும், சுவையும் சேர அவ்வப்போது கிளரப்படுகிறது.
கேட்பதற்கே கேக் கலவை சுவையாக இருக்கும் போது சுவைத்தால் எப்படி இருக்குமோ என்பது கற்பனைக்கு எட்டாதது அல்ல. இந்த கேக் கலவை தயாரிக்கும் பணியில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, ஹோட்டலில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.



