fbpx
Homeபிற செய்திகள்தேனியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தேனியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தேனியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேகரிப்பு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு வாக னத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலத்தில் பள்ளி மாணவ மாணவியர் கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மழை நீர் சேகரிப்பது பற்றி பதா கைகள் ஏந்தி கோஷம் போட்டு ஊர்வலமாக சென்று மீண்டும் பங் களா மேட்டில் முடிவுற்றது.

இந்த நிகழ்ச்சியினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் பார்த் திபன் முன்னிலையில் உதவி செயற்பொறியாளர்கள் செல்வி, ராஜேஷ் மற்றும் செயற்பொறியாளர் நடராஜன் அருண்குமார், நீர்நிலை ஆய்வாளர், உதவி பொறியாளர் யோகேஸ் வரன் மற்றும் அலுவலக உதவியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ம் தேதி மழைநீர் சேகரிப்பு வாரமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக கொண்டாடுவது வழக்கம் என செயற்பொறியாளர் பார்த்திபன் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img