fbpx
Homeபிற செய்திகள்கோவையில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா 107வது நிறுவன தினவிழா கொண்டாட்டம்

கோவையில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா 107வது நிறுவன தினவிழா கொண்டாட்டம்

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளின் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியா, 11.11.1919 அன்று சேத் சீதாராம் பொதார் அவர்களால் நிறுவப்பட்டு மகாத்மா காந்தியால் துவக்கி வைக்கப்பட்டது. வங்கியின் 107வது நிறுவன நாள் விழா மும்பையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்விலும் கோவை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் கொண்டாடப்பட்டது.

மும்பை விழாவில் நிதித்துறை சேவைகள் செயலர் நாகராஜூ முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்வில், வளரும் பாரதத்தின் தொலைநோக்கு இயக்கத்திற்கு உதவிடும் இயக்கத்தின் இந்த ஆண்டின் கருப்பொருளான ஒன்றிணைந்து ஒளிரும் எதிர்காலத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்விற்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஆஷீஸ் பாண்டே தலைமை தாங்கினார். செயற்குழு இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கோவையில் இந்துஸ்தான் கலைக் கல்லூரி டாக்டர் அப்துல் கலாம் அரங்கில் நடைபெற்ற நிகழ்விற்கு யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் கோவை மண்டலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார், பிராந்திய தலைவர் எஸ்.எஸ்.லாவண்யா ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் திரளான வாடிக்கையாளர்கள், வங்கி பணியாளர்கள் மேனாள் தொழிலாளர்கள் குடும்ப உறுப்பினர்களோடு பங்கேற்று சிறப்பித்தனர்.
அப்போது வாடிக்கையாளர்கள் நலனுக்கென துவக்கப்பட்ட மூன்று திட்டங்களுடன் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பட்டியலிடப்பட்ட இவ்வங் கியின் மொத்த ஒதுக்கப்பட்ட மூலதனத்தில் 74.76 சதவீதப் பங்கை இந்திய அரசு கைக்கொண்டுள்ளது. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா 8600க்கும் மேற்பட்ட உள்நாட்டுக் கிளைகள், 9000க்கும் மேற்பட்ட எடிஎம்கள், 74,100க்கு மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் 25,900க்கும் மேற்பட்ட தொடர்பு முகப்புகளை கொண்டுள்ளது.

30.9.25 அன்று வங்கியின் மொத்த வணிகம் ரூ.22,09,828 கோடி ஆகும். இது ரூ.12,34,621 கோடி இட்டு வைப்புகளுடன் ரூ.9,75,207 கோடி முன் பணங் களையும் உள்ளடக்கியதாகும்.


வங்கிக்கு அயல்நாடுகளில் சர்வதேச நிதிமையம் (ஐ.அ.அமீரகம்) மற்றும் சிட்னி (ஆஸ்திரேலியா) ஆகிய இரு இடங்களில் கிளைகள் உள்ளன. இங்கிலாந்தின் லண்டனில் ஒரு வங்கித் துணை நிறுவனம், மலேசியாவில் ஒரு நிறுவனம் மற்றும் 4 உள்நாட்டு வங்கி துணை உதவி அலுவலகம், 3 கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் ஒரு இணை நிறுவனம் மற்றும் ஆந்திராவில் கிராமிய வங்கியும் உள்ளன.

100 சதவீத தனிப்பட்ட வங்கித்தீர்வுகளை அளிக்கும் நாட்டிலேயே முதன்மையான பெரிய பொதுத்துறை வங்கி யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகும்.

இவ்வங்கி அதன் தொழில்நுட்பத்தின் வீரியம், எண்ம வங்கியில் நிதி உள்ளீடு, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் உதவிகள் மற்றும் மனிதவள அபிவிருத்திக்கென பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img