திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில், தலைமைக்காவலராகப் பணிபுரிந்த ராதாகிருஷ்ணன் இயற்கை மரணமடைந்தார். அவர் பாங்க் ஆப் பரோடாவில் தமிழ்நாடு அரசு எம்பிளாயீஸ் சேமிப்பு கணக்கு வைத்திருந்த நிலையில், அவரது குடும்பத் துக்கு இன்சூரன்ஸ் இழப்பீடு பணம் ரூ.15 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிதிக்கான காசோலையை அவரது துணைவியார் அபர்ணா தேவியிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரீஷ் அசோக் வழங்கியபோது எடுத்த படம். அருகில் பாங்க் ஆப் பரோடா வங்கியின் கோவை துணை பிராந்திய மேலாளர் வி.கே.சௌடையா உள்ளார்.



