தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில்நுட்ப மகத்துவ மையம், கோவை தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டில் அக்டோபர் 9 மற்றும் 10ம் தேதிகளில் கலந்து கொண்டது.
COXBIT தனது புதுமைமிகு ஆராய்ச்சி முயற்சிகள், முன்னோடி யான ஆய்வக வசதிகள் மற்றும் தொழில்-கல்வி இணைப்பை வலுப்படுத்தும் முறைமை மூலம் உயிரித் தொழில்நுட்பத் துறையில் மேற்கொண்டுள்ள முன்னேற்றங்களை விளக்கியது.
இம்மையம், என் சைம்கள் மற்றும் உயிர் மூலக்கூறு வடிவமைப்பு, உயிர் சார்ந்த தயாரிப்புகள் உருவாக்கம், பழம் பழுக்கச் செய்யும் பைடோஹார் மோன்கள், தாவர வளர்ச்சி ஊக்கிகள் மற் றும் உயிர் உள்ளீடுகள் போன்ற துறைகளில் மேற் கொண்டுள்ள முக்கியமான ஆய்வுகளைத்தளத்தில் வெளிப்படுத்தியது. இத் திட்டங்கள் அனைத்தும் வேளாண்மை உற்பத்தித் திறனை மேம்படுத்துவதும், சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலைத்த வேளாண்மையை ஊக்குவிப்பதும் நோக்கமாகக் கொண்டவை.
இரு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் 72,728 பேர் கலந்துகொண்டனர். COXBIT-வின் கண்காட்சி அரங்கில், மாணவர்கள், தொழில் முனைவோர் மற்றும் தொழில் துறை பிரதிநிதிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றது. மையத்தின் குழு வினர், உயிரியல் பகுப் பாய்வு சேவைகள், ஆய்வக வசதிகள் மற்றும் புதுமை ஆய்வக தொழில் நுட்பங்களைப்பற்றி விரிவான விளக்கத்தை வழங்கினர். கல்வியையும் தொழில் துறையையும் இணைக்கும் பாலமாக COXBIT ஆற்றும் பங்க ளிப்பை பார்வையாளர்கள் பாராட்டினர்.

முக்கிய சிறப்பம்சமாக, COXBIT-இன் கேபின் மற்றும் தளப்பரப்பு பயன்பாட்டாளர்கள் தங்களது புதுமைமிகு தயாரிப்புகள் மற்றும் புத்தொழில் நிறுவன முயற்சிகளைப் பிரத்யேகமாகக் காட்சிப்படுத்தினர்.
இதில் M/s. Nature Mills (எள்ளு, நிலக்கடலை, தேங்காய் போன்றவற்றின் குளிர் அழுத்த எண்ணெய்கள்). M/s.INSILICOMICS (ஜெனோ மிக்ஸ், புரோட்டியோமிக்ஸ், மெட்டபோலோமிக்ஸ் மற்றும் பயோ இன்ஃபார் மெட்டிக்ஸ் நிபுணத்துவ சேவைகள்).
M/s. Leaders Desk (மென்மையான திறன் பயிற்சி, தொழில் நுட்பப் பயிற்சி, ஆசிரியர் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவர் வளர்ச்சி திட்டங்கள்). M/s. V.R Boom (மின்சார இயங்குதன்மை வழியாக நிலைத்த வேளாண்மை). M/s. Pechi Foods Pvt. Ltd. (பாரம்பரிய மசாலா கலவைகள்). M/s. Adams India (வேளாண்மைக்கான செயற்கை நுண்ணறிவு தீர்வுகள்).M/s.Sherpa Biotech (மஷ்ரூம் ஸ்பான் Agaricus bisporus).M/s. Valyria Visions (Al அடிப் படையிலான விதை இனப்பெருக்க ஆராய்ச்சி தீர்வுகள்) என பல நிறுவ னங்கள் பங்கேற்றனர்.
அனைத்து நிறுவனங்களின் காட்சிப்படுத்தல்கள் பார்வையாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளிடமிருந்து சிறந்த பாராட்டைப் பெற்றன.
TNGSS 2025-இல் COXBIT பங்கேற்பு, புதுமை, தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் உயிரித் தொழில்நுட்பத்தின் வணிகமயப்படுத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நீண்டகால நோக்கத்தை பிரதிபலிக்கிறது.
இந்த மாநாடு, புதுமை யாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அர சாங்க பிரதிநிதிகள் உடன் எதிர்கால கூட்டாண்மை கள் மற்றும் இணை ஆராய்ச்சிகள் குறித்து பயனுள்ள உரையாடல்களுக்கு வழி வகுத்தது.



