சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-ஆம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடக்கம் மற்றும் மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் மற்றும் சிறப்பு அதிகாரி சி.திருப்பதி தலைமை வகித்து வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்வை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
மருத்துவ கண்காணிப்பாளர் என்.ஜூனியர் சுந்தரேஷ் மாணவர்களுக்கான உறுதிமொழியை வாசிக்க, நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் வெள்ளை அங்கி அணிந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
துணை முதல்வர் சசிகலா மற்றும் துறைத் தலைவர்கள் வாழ்த்திப் பேசினர். முன்னதாக, தோல் மருத்துவத் துறை தலைவர் மற்றும் மருத்துவக் கல்விப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் பி.கே.கவியரசன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள், பெற்றோர்கள், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சமூக மருத்துவத் துறை பேராசிரியர் டி.கே.செந்தில் முருகன் நன்றி கூறினார்.



