ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், பசுவந்தனை இந்து நாடார் திருமண மண்டபத்தில் பசுவந்தனை, நாகம்பட்டி, கீழமுடிமண், பி.துரைச்சாமிபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் பார்வையிட்டு பயனாளிகளுக்கு மருந்துபெட்டகம், விதைப்பை உள்ளிட்டவை வழங்கினார்.
நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சுசிலா, கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ், மாவட்ட பிரதிநிதி சத்யராஜன், பசுவந்தனை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சிதம்பரம், குதிரைக்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா, கிளைச் செயலாளர்கள் அய்யம்பிள்ளை, செல்லத்துரை, இசக்கிமுத்து,கணேசன், ஸ்டீபன், பெருமாள்சாமி, லட்சுமணன் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மாரிச்செல்வம் ஒன்றிய அயலக அணி அமைப்பாளர் கண்ணன் அண்ணாதுரை இளைஞர் அணி நாகம்பட்டி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



