Homeபிற செய்திகள்ஈரோடு கலைக் கல்லூரி மாணவர்கள் வலுதூக்கும் போட்டியில் சாதனை

ஈரோடு கலைக் கல்லூரி மாணவர்கள் வலுதூக்கும் போட்டியில் சாதனை

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி அம்சவல்லி 83 கிலோ எடை பிரிவில் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வலுதூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் மற்றும் மதன்குமார் அகில இந்திய இளையோருக்கான பளு தூக்கும் போட்டியில் 81 கிலோ பிரிவில் வெண்கல பதக்கம் பெற்றனர்.

இதனைப் பாராட்டி தமிழக அரசின் விளையாட்டின் உயரிய ஊக்கத்தொகையான தலா ரூ.1,50,000ஐ துணை முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.

இவர்களை கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளர் கே.கே.பாலுசாமி, கல்லூரியின் முதல்வர் இரா.சங்கரசுப்பிரமணியம், இயக்குனர் இரா.வெங்கடாசலம் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, உடற்கல்வி இயக்குனர், விளையாட்டு குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img