கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விஆர்பிடி 999 புளியந்துறை கூட்டுறவு சங்கங்கள் உள்ளடக்கிய கிராமங்களில் தமிழ்நாடு அரசு பால்வளத்துறை சார்பில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் இணைந்து கன்று பேரணியை நடத்தினர்.
ராஷ்டிரிய கோகுல் மிஷின், ஆர்சிஎம் 2025-26 மட்டப்பட்டு, மேல் வளவு, எருக்கம்பட்டு, வண்டகப்பாடி ஆகிய கிராமங்களில் நடந்த இதனை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், சங்கராபுரம் எம்.எல்.ஏ தா.உதயசூரியன் ஆகியோர் கன்று
பண்ணையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள்.
நிகழ்வில் கன்று வளர்ப்போரின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தா.உதயசூரியன் எம்எல்ஏ வழங்கினார்.
கல்வராயன் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சி.சந்திரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



