கோவை கொங்குநாடு மருத்துவமனையின் சார்பாக உலக கல்லீரல் அழற்சி தினம் பவர் ஹவுஸ் எதிரில் சிவானந்தா காலனி சிக்னல் பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கொங்குநாடு மருத்துவமனையில் ஜீரண மண்டல சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜா கலந்து கொண்டு துவக்கி வைத்து, ஹெபடைடிஸ் ஒருவரிடம் இருந்து மற்றொரு எவ்வாறு பரவுகிறது? அந்த வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது? இதிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது? என்பது பற்றி எடுத்துரைத்தார்.
மேலும் கொங்குநாடு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பி.ராஜு மற்றும் கொங்கு நாடு மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜு பேசும் பொழுது, ஹெபடைடிஸ் எ முதல் இ வரை உள்ள வைரஸ்கள் எவ்வாறு தாக்கம் செய்யும், எந்த வகையான வைரஸ்களை எவ்வாறு எதிர்கொள்வது, அதற்கு உண்டான பாதுகாப்பு மருந்துகள் அது பரவும் விதம் ஆகியவற்றை பற்றி புள்ளி விவரங்களுடன் தெளிவாக எடுத்துரைத்தார்.
உலக கல்லீரல் அழற்சி தினத்திற்காக கொங்கு நாடு நர்சிங் கல்லூரி மாணவிகளின் படக் கண்காட்சி, குறுநாடகங்கள் ஆகியவற்றின் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கொங்கு நாடு நர்சிங் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜோஸ்பின் ஜாக்லின் மேரி , கல்லூரியின் ஆசிரியர்கள் மாணவிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண் டனர்.



