fbpx
Homeபிற செய்திகள்ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் மெட்ரோவின் நிர்வாகிகள் பதவி ஏற்பு

ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் மெட்ரோவின் நிர்வாகிகள் பதவி ஏற்பு

ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் மெட்ரோவின் 25ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தென்காசி ரயில் நிலையம் எதிரில் உள்ள ஸ்ரீ நம்பி கிருஷ்ணா ஹாலில் நடைபெற்றது.

இதில் ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் மெட்ரோவின் தலைவராக வெங்க டேஸ்வரன், செயலாளராக முத்துக்குமாரசுவாமி, பொருளாளராக சந்திரதாஸ் பதவி ஏற்று கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் விஜயகுமார், டாக்டர் சேக் சலீம், தென்காசி நகராட்சி சேர்மன் சாதிர், மதிமுக மாவட்ட செயலாளர் இராம உதயசூரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், தென்காசி நகர மன்ற தலைவர் சாதிர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில், தென்காசி தலைமை தபால் நிலைய பெண் ஊழியர் சுப்புலட்சுமி ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தென்காசி நகராட்சி களப்பணியா ளர்கள் 25 நபர்களுக்கு மழை கோர்ட் வழங்கப்பட்டது.

ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம், குற்றாலம் சாரல் குற்றாலம் சென்ட்ரல் செங்கோட்டை, சென்ட்ரல் கடையநல்லூர், கடையநல்லூர் சென்ட்ரல், பாவூர்சத்திரம், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய சங்கங்களில் இருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக செயலாளர் முத்துக்குமாரசாமி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img