கள்ளக்குறிச்சி மாவட்டம். நீலமங்கலம் தனியார் பள்ளியில். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் உயர் கல்வி தொடர்பாக பெண் குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் நிறைந்த மனம் நிகழ்ச்சியில் உயர் கல்வி வழிகாட்டுதல் குறித்து .பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசுகையில், பெண்கள் அனைவரும் உயர் கல்வி கற்பிக்கும் பொழுது தவறாமல் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும்.
இதேபோன்று உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியின் மூலம் பெண்கள் உயர்க்கல்வி வாய்ப்புகள் குறித்து அறிந்து கொண்டு. உயர்கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.



