உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பூதங்குடி எஸ்.டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதற்கு சிறப்பு விருந்தினராக சேத்தியாத்தோப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜிக்குமார் பேரணியில் பங்கேற்று பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு ஏற்படும் உடல் நலகுறைவு பற்றியும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் இயற்கை எவ்வாறு மாசடைகின்றது என்பதை பற்றியும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இப்பேரணியில் பள்ளியின் தாளாளர் டாக்டர் சாமுவேல் சுஜின் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபா சுஜின் ஆகியோர் தலைமை தாங்கினர்.
பள்ளி தாளாளர் முன்னிலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர். பேரணியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தோணி ராஜ் முன்னிலை வகித்தார்.