Homeபிற செய்திகள்சிதம்பரத்தில் காயிதேமில்லத் பிறந்தநாள் விழா

சிதம்பரத்தில் காயிதேமில்லத் பிறந்தநாள் விழா

சிதம்பரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் காயிதே மில்லத் பிறந்த நாள் விழா முன்னிட்டு சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நலஉதவிகள் வழங்கப்பட்டன.

சிதம்பரம் அரசு காமராசர் மருத்துவமனைக்கு மூன்று சக்கர நாற்காலியை மருத்துவ முதன்மை அதிகாரி டாக்டர் லட்சுமி மேற் பார்வையில் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத் துவர் சரவணனிடம் வழங்கினர்.

3 சக்கர நாற்காலியும் கிள்ளை பட்டினவர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி, சொக்கன் கொல்லை ஊராட்சி நடுநிலை பள்ளிகளைச் சார்ந்த 100 மாணவ, மாணவிகளுக்கு பென் சில் பாக்ஸ் மற்றும் எழுதுபொருட்களையும் வழங்கினர்.

நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் முஹம் மது ஜகரிய்யா, சிதம்பரம் நகர தலைவர் அன்வர் அலி,நகர செயலாளர் கவிஞர் மஹபூப் ஹுசைன் ஜவ்ஹர், மண்டல ஒருங்கிணைப்பு இணை செயலாளர் லால்பேட்டை சல்மான், கடலூர் தெற்கு மாவட்ட முஸ்லிம் யூத் லீக் தலைவர் முஹம்மது முஸ்தபா, மாணவரணி அஜீம் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img