fbpx
Homeபிற செய்திகள்அதிமுக ஆட்சியில் செய்த தவறுகளை சரி செய்து வருகிறோம் : மேயர் ஜெகன்பெரியசாமி பேச்சு

அதிமுக ஆட்சியில் செய்த தவறுகளை சரி செய்து வருகிறோம் : மேயர் ஜெகன்பெரியசாமி பேச்சு

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


இதில், மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், “தமிழக முதலமைச்சர் முக.ஸ்டா லின் உத்தரவிற்கிணங்க பொதுமக்களிடம் குறைதீர்க்கும் முகாம் நான்கு மண்டலங்களிலும் 10 மாதங்களாக நடைபெறுகிறது. அந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படுகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிறது.


1700 புதிய சாலைகள் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புதிதாக போடப்படவுள்ளது. அண்ணா பேருந்து நிலையம் கீழ்தளத்தில் பேருந்து நிறுத்தப்படுகிறது. இரண்டு மாடிகள் ஷாப்பிங் மாலாக உள்ளது.


3வது தளத்தில் பொதுமக்கள் படிப்பறிவை ஊக்குவிக்கும் வகையில் தனியார் பங்களிப்புடன் நவீன படிப்பு வசதிக்கு ஏற்ப மாற்றப்பட உள்ளது.
அதன் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் ஏற்படும். மாநகராட்சிக்கு 50 ஏக்கர் இடம் உள்ளது.

அந்த இடங்களில் மரங்கள் நடப்பட்டு குறுங்காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மழை காலங்களிலும் ஒவ்வொரு பாதிப்புகள் கண்டறிந்து அவை சரி செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் வரும் காலங்களில் எந்த ஒரு பாதிப்பும் இல் லாத அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


ஹைமாக்ஸ் லைட்டு மாநகராட்சி பகுதியில் ஐந்து இடங்களில் வருகிறது. மேலும் அங்கன்வாடி மையங்கள் புதிதாக கட்டப்பட உள்ளது. மாதா கோவில் அருகில் பயன் படுத்தப்படாமல் இருக்கும் இடத்தில் அழகுபடுத்தப்பட உள்ளது. மகளிருக்கு பூங்கா அமைக்கப்படுகிறது. ஜிம் அமைக்கப்படுகிறது.

அதுபோல ஆண்களுக்கும் எம்ஜிஆர் பூங் காவில் ராஜாஜி பூங்காவில் நடைபாதை உடன் கூடிய ஜிம் அமைக்கப்படுகிறது. 2022ம் ஆண்டு அண்ணா நகர் பகுதி பெயர் மாற்றம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அது நடைமுறையில் வரவில்லை. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நீதிமன்றம் அருகில் உள்ள சுகாதார மையத்தை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதுபோல அண்ணா பேருந்து நிலையமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதிய பேருந்து நிலையத்தில் ஐந்து கழிப்ப றைகளை நிபந்தனையின் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. சத்யா நகரில் புதியதாக டாய்லெட் கட்டப்படுகிறது. ராஜபாண்டி நகரில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. லேபர் காலனியிலும் புதிதாக கழிப்பறை கட்டப்பட உள்ளது. அதுபோல அதன் அருகில் உள்ள சுனாமி காலனியிலும் டாய்லெட் கட்டப்பட உள்ளது. இந்த டாய்லெட் டுகளையும் மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்கும்.


1995-ல் இருந்த மாநகராட்சிக்கும் நாம் பொறுப்பேற்ற பின் நடை பெற்ற பணிகளுக்குப் பின் 2025ல் வளர்ச்சி அடைந்துள்ள மாநகராட்சியையும் எல்லோரும் அறிவீர்கள்.


கடந்த அதிமுக ஆட்சியில் செய்த பல தவறுகளை நாம் ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம். அதிலும் குறிப் பாக நிறுத்திவைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை முறைப்படுத்தி உள்ளோம்.


24 மணி நேரமும் பல பகுதிகளுக்கு குடிதண்ணீர் வழங்கி வருகிறோம். மாநகராட்சி உருவாகும் வகையில் பணிகள் மேற்கொண்டுள்ளோம். மாசு இல்லாத மாநகரை உருவாக்கி கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.


இதனைத்தொடர்ந்து ஒப்பந்த ஊழியர்கள் பணி நீட்டிப்பு கழிப்பறை பராமரிப்பு பணி ஒப்பந்தம் நீட்டிப்பு உள்ளிட்ட 30 அம்ச தீர்மானம் நிறைவேற்றிய பின் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து மேயர் ஜெகன்பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசு வாமி, அன்னலெட்சுமி, கலை செல்வி, நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கீதாமுருகேசன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், கனகராஜ், கண்ணன், வைதேகி சோமசுந்தரி, அதிர்ஷ்டமணி, ஜான்சிராணி, நாகேஷ்வரி, ஜெய சீலி, சரவணக்குமார், இசக்கிராஜா, ரிக்டா பேபிஏஞ்சலின், காங்கிரஸ் சந்திர போஸ், எடின்டா, கற்பககனி, கம்யூ னிஸ்ட் தனலெட்சுமி, முத்து மாரி, இ.யு.மு.லீக் மும்தாஜ், மதிமுக ராமு அம்மாள், துணை ஆணையர் சரவணகுமார், பொறியாளர் தமிழ்செல்வன், உதவி பொறியாளர் சரவணன், உதவி ஆணையர்கள் சுரேஷ்குமார், வெங்கட்ராமன், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளர் ராமசந் திரன், காந்திமதி, முனீர்அகமது, நகரமைப்பு அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர்கள் நெடுமாறன், ஸ்டாலின், பாக்கியநாதன், ராஜபாண்டி, ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img