கோவை சிவானந்தபுரம் சங்கராகண் மருத்துவமனை வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் அதிநவீன லேசிக் (LASIK) மையத்தின் தொடக்கவிழா நடைபெற்றது.
இதில் சங்கரா கண் மருத்துவமனை, கோயம்புத்தூர், தனது ‘வானவில்’ திட்டத்தின் கீழ் அடுத்த ஒரு வருடத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கண் குறைபாடுகளை கண்டறியும் வளைய பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சங்கரா கண் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மருத்துவர் ஆர்.வி.ரமணி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இந்தியா வில் தற்போது 14 சங்கரா கண் மருத்துவமனைகள் உள்ளன, 14-வது மருத்து வமனையை வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இதுவரை, சங்கரா கண் மருத்துவமனைகள் மூலம் 1 கோடிக்கும் அதிகமானோர் பல்வேறு கண் தொடர்பான பிரச்ச னைகளுக்கு சிகிச்சை பெற் றுள்ளனர் என்று டாக்டர் ரமணி கூறினார்.
ஒரு வருடத்திற்கு முன்பு மருத்துவமனைக்கு வந்த ஐசிஐசிஐ அறக்கட்ட ளையின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தலை வர் சஞ்சய் தத்தா மருத்து வமனையின் சேவைகளால் ஈர்க்கப்பட்டு, அதன் முயற் சிகளுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.
லேசிக் லேசர் சிகிச்சை மையத்தை திறந்து வைத்த கோவை மாவட்ட ஆட் சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், அதிநவீன கண் சிகிச்சை வசதியை அமைத்ததற்காக சங்கரா கண் மருத்துவமனைக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சங்கரா கண் அறக் கட்டளை, இந்தியாவின் தலைவர் டாக்டர் எஸ்.வி. பாலசுப்ரமணியம் தனது வரவேற்புரையாற்றினார்.
கார்னியா ஒளிவிலகல் அறுவை சிகிச்சை தொழில் நுட்பத் துறை தலைவர் மருத்துவர் ஜே.கே. ரெட்டி கூறுகையில், லேசிக் லேசர் சிகிச்சை மையம், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன் றான ஜெர்மனி நாட்டின் ஸ்விண்ட் அமாரிஸ் 1050 ஆர்எஸ் உயர் செயல் திறன் லேசர் அமைப்பைக் கொண்டுள்ளது என்று கூறினார்.



