fbpx
Homeபிற செய்திகள்மொழி திணிப்பை விரும்புவதில்லை: - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

மொழி திணிப்பை விரும்புவதில்லை: – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

தேனி அருகே மதுராபுரியில் வருகிற 2ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொதுக்கூட் டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டம் நடை பெறும் இடத்தில் பந்தக் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி உதயகுமார் மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பந்தக்கால் நடப்பட்டு கூட்டம் நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச் சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:
தேனி எங்களுக்கு ராசியான இடம். முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜி ஆர், ஜெயலலிதா வெற்றி பெற்ற இடம். மீண்டும் சரித்திரம் திரும்புகிறது என்பதை மக்களுக்கு உணர்த்தும் விதமாக வெற்றி யின் வெளிச்சம் தேனியில் தொடங்குவதால் இங்கு கூட்டம் நடத்தப்படுகிறது.

காக்கா உட்கார பனை மரம் விழுந்தது போல் ஓபி எஸ்க்கும் நாங்கள் கூட்டம் நடத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தான் தெரிவிப்பார். வியூகங்களை வெளியில் சொல்ல முடியாது.
ஓபிஎஸ் இணைப்பு குறித்து நாங்கள் சொல்வ தற்கு ஒன்றுமில்லை எல்லா வற்றிற்கும் எடப்பாடி பழனிச்சாமி பதில் தெரி வித்து விட்டார். மூன்று மொழிகளை படிப்பவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. படிப்பவர்களை ஆதரிக்கிறோம். ஆனால் திணிப்பதை விரும்ப வில்லை.

இதைவிட பெரிதாக கூட்டம் கூட்ட ரவீந்திர நாத் கூறுகிறார் என்றால் அவர்களுக்கு இப்போது பயம் வந்துவிட்டது, கூட் டம் கூட்டட்டும் அல்லது தஞ்சாவூர் கடலில் கூட மூழ்கட்டும். அம்மா என்று கூறுவது ஜெயலலிதாவிற்கு 100% பொருத்தமானது. அப்பா என்பது ஸ்டாலினின் தந்தை கலைஞர் கருணாநிதிக்கு பொருத்தமானது. அதை ஏன் இவர் விரும்புகிறார் என தெரியவில்லை. இவ் வாறு அவர் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img