55 வது ஆண்டு விளையாட்டு விழா திங்களன்று ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. முதன்மை விருந்தினர் ஜின்சி பிலிப், துணை கமாண்டன்ட் சிஆர்பி எஃப் (விரைவான அதிரடி படை) ஒலிம்பியன் மற்றும் தியான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர், உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு பதக்கம் வென்றவர், வெற்றியாளர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். கல்லூரி தலை வர் சி.ஜெயகுமார், செயலாளர் எஸ்.டி. சந்திர சேகர், பொருளா ளர் பி.கே.பி. அருண், இணை செயலாளர் கே.வி.ராசமாணிக்கம், முதல்வர் டாக்டர் எஸ்.கே.ஜெயந்தி, மற்றும் உடற்கல்வி இயக்குனர் டாக்டர் கே.மாலதி வாழ்த்துரை வழங்கினர்.



