திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாநகராட்சி, முருகம்பாளையம், பகவதி நகர் பகுதியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் பின்னலாடை தொழில் கடன் பெற்று பயனடைந்து வரும் பயனாளி விஷ்ணு பிரபுவின் பின்னலாடை நிறுவனத்தினை “நிறைந்தது மனம்“ நிகழ்ச்சியில் செய்தியாளர்களுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
பின்பு அவர் கூறியதாவது:புதிய தொழில் முனை வோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.45.92 இலட்சம் மானியத்தில் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் பின்னலாடை தொழில் கடன் பெற்று பயனடைந்து வரும் பயனாளியின் நிறுவனத்தினை “நிறைந்தது மனம்“ நிகழ்ச்சியின் வாயிலாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த பயனாளி விஷ்ணு பிரபு பின்னலாடை தொழில் நிறுவனத்தை தொடங்கி 20 தொழிலாளர்களுக்கு வேலை வழங்கி வருவது மனம் நிறைவாக உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் 2021-2022ம் ஆண்டில் 282 நபர்களுக்கு ரூ.13.98 கோடி மானியத்தில் ரூ.95.70 கோடி மதிப்பீட்டிலும், 2022-2023-ம் ஆண்டில் 312 நபர்களுக்கு ரூ.20.63 கோடி மானியத்தில் ரூ.129.89 கோடி மதிப்பீட்டிலும், 2023-2024 – ம் ஆண்டில் 451 நபர்களுக்கு ரூ.23.06 கோடி மானியத்தில் ரூ.125.13 கோடி மதிப்பீட்டிலும், 2024-2025 -ம் ஆண்டில் தற்போது வரை 129 நபர்களுக்கு ரூ.8.49 கோடி மானியத்தில் ரூ.50.42 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 1,174 நபர்களுக்கு ரூ.66.16 கோடி மானியத்தில் ரூ.401.14 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பயனாளி விஷ்ணு பிரபு கூறியதாவது:
நான் சோமனூர் பகுதியில் வசித்து வருகி றேன். நான் எம்பிஏ படித்துள்ளேன். நான் ரூ.45.92 லட்சம் மானியத்தில் ரூ.1.86 கோடி கடன் பெற்று சொந்தமாக, பகவதி நகர் பகுதியில் பின்னலாடை தொழில் நிறுவத்தை 2023ம் ஆண்டில் தொடங்கினேன்.
தற்போது இந்நிறுவத்தில் 20 தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இதன் மூலம் மாதம் ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டி வருகிறேன். தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிறைந்தது மனம் நிகழ்ச்சியில், மாவட்ட மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) கார்த்திகவாசன், உதவி இயக்குநர் கிரீசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஸ்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) மனோஜ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.



