பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை மாநகராட்சியில் புதிய நியாய விலைக்கடை கட்டிடங்கள் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் மரு.எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை மாநகராட்சி மேயர் நிர்மலா கார்த்திக்வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை ஒன்றியத்தில் திருவண் ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கட்டுப்பாட்டில் 82 முழுநேர கூட்டுறவு நியாயவிலைக் கடைகளும், 07 பகுதிநேர கூட்டுறவு நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 89 கூட்டுறவு நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றது.
இதில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் திருவண்ணாமலை மாநகராட்சி கற்பகம் நியாய விலைக் கடை எண்.42-க்கு 2023-2024 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12.50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சொந்த கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் மற்றும் குடும்ப அட்டைகளை வழங்கின £ர்கள்.
தொடர்ந்து, திருவண்ணாமலை மாநகராட்சி, சந்தைமேடு பெரும்பாக்கம் சாலையில் நமக்கு நாமே திட்டம் 2023 -24 மூலம் ரூபாய் 16.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கடை எண்: 43 என்ற புதிய கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையினை பொதுமக்களின் பயன் பாட்டிற்கு அமைச்சர் எ.வ.வேலு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் மற்றும் குடும்ப அட்டைகளை வழங்கினார்கள்.
இதனை தொடர்ந்து, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், பாவுப்பட்டு காலனி பகுதியில் புதிய பகுதிநேர நியாயவிலைக்கடையினை அமைச்சர் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் திருவண் ணாமலை ஊராட்சி ஒன்றியம், பாவுபட்டு மற்றும் நடுப்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற கட்டிடங் களை அமைச்சர் குத்து விளக்கேற்றி பயன்பாட்டி ற்கு திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) டாக்டர் மணி, திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, திருவண்ணாமலை ஒன்றியக்குழுத்தலைவர் கலைவாணி கலைமணி, மெ. பிரித்திவிராஜன் வட்டார வளர்ச்சி அலுவலர்( கி. ஊ) உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



