இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை சார்பில் சமூக சேவகர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அவிநாசி சாலை சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ஸ்ரீ ராமுலு வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் வர்த்தக சபை நிர்வாகிகள் ராஜேஷ் பி.லந்து, சி.சுந்தரம். அண்ண £மலை, துரைராஜ் மற்றும் முன்னாள் நிர்வாகிகள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ஸ்ரீரா முலு பேசும்போது, பாரம் பரியமிக்க இந்திய தொழில் வர்த்தக சபை கோவையில் தொடங்கி 95 ஆண்டுகள் பல்வேறு சாதனைகளை கடந்து வந்துள்ளது. வர்த்தக சபை சார்பில் சமூகத்தில் எந்தவித அடையாளம் இல்லாமல் விளம்பரம் இல்லாமல் சேவையாற்றும் நபர்களுக்கு தொடர்ந்து 10 ஆண்டுகளாக கௌரவித்து வருகிறோம்.
இன்று மாற்றுத்திறனாளி களுக்காக சேவையாற்றி வரும் குணசேகரன், சுற்றுச்சூழல் ஆர்வலர் லோகநாதன், யானைகள் மறுவாழ்வுக்காகவும் ஆதரவற்ற நபர்களுக்கு உதவி வரும் செந்தில்குமார் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளோம்.
சமூகத்தில் அக்கறை உள்ள இவர்களை பாராட்டுவதில் இந்திய தொழில் வர்த்தக சபை பெருமை அடைகிறது, என்று கூறினார் நிகழ்ச்சிக்கு முன் பாக மிருதுளா நடன குழுவினரின் பரதநா ட்டியம், மாஸ்டர் அர்ஜுன் பியானா இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவிக் கப்பட்டது நிறைவில் வர்த்தக சபை செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.