கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், சுண்டக்காமுத்தூர், என்.டி.பி.வீதியில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் வீடற்றோர் தங்கும் விடுதி கட்டுமானப் பணியினை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணியினை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மாமன்ற உறுப்பினர் முருகேசன், உதவி நகர திட்டமிடுநர் ஜெயலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



