fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (15.08.2024) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ச.உமா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக மாவட்ட ஆட்சியர் ச.உமா, காவல் கண்காணிப்பாளர் எஸ்.இராஜேஸ் கண்ணன் ஆகியோர் வெண்புறாக்களையும், வண்ணப்பலூன்களையும் வானில் பறக்க விட்டார்கள். மேலும், சுதந்திர போரட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்தம் வாரிசுதாரர்களை சிறப்பு செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கதர் ஆடை அணிவித்து பரிசுகளை வழங்கினார். பின்னர், அணிவகுப்பினை சிறப்பாக நடத்தியதற்காக 100 ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினருக்கும், காவல்துறை பேண்ட் வாத்தியக்குழுவினருக்கும் மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்து, கேடயங்களை வழங்கினார்.

சுதந்திர தினவிழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.96,011/- மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.12,000/- மதிப்பில் இலவச தையல் இயந்திரம், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.22.91 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், வேளாண்மைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.25,000/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள், கூட்டுறவுத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2.70 இலட்சம் மதிப்பில் வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், தாட்கோ சார்பில் 12 நபர்களுக்கு ரூ.27,000/- மதிப்பில் கல்வி உதவித்தொகை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு அட்டைகள் என மொத்தம் 26 பயனாளிகளுக்கு ரூ.27.21 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். சிறப்பாக பணியாற்றிய 34 காவல்துறை அலுவலர்கள், 224 அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 258 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img