ஜி.கே.என்.எம் மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குழுவின் சார்பில் இந்திய உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் உள்ள லட்சுமி மில்ஸ் அர்ப்பன் சென்டரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை கோவை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் (போக்குவரத்து) ரோஹித் நாதன் துவக்கி வைத்தார். ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி தலைமை தாங்கினார். ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ குழுவினர் மற்றும் ஜி.கே.என்.எம். செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் உடன் இருந்தனர்.
இந்நிகழ்வில்,
உறுப்பு தானம் குறித்த தவறான நம்பிக்கைகளை உடைக்கும் வகையில் விழிப்புணர்வு நடைபெற்றது.



