தமிழ்நாடு அரசும் மக்கள் சிந்தனைப் பேரவையும் இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா – 2024, ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி எழுதிய 3 நூல்களை பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவிபாரதி தலைமை தாங்கினார். தூத்துக்குடி குமிழ்முனை பதிப்பகம் , புத்தகப் பதிப்பாளர் ஜே.சைமன் முன்னிலை வகித்தார்.
மாணவர் மகே.கெளதம் எழுதிய ‘காவிரியின் மை’ என்ற சிறுகதை தொகுப்பு, சி.பூமிகா (பெண்பா) என்ற மாணவி எழுதிய ‘புரியாத பிரியம்’ என்ற நாவல் செ.முகிலன் (கார்முகில்) என்ற மாணவர் எழுதிய ‘கிறுக்கல்கள்’ எனும் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.