fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் சிட்னியில் துவக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் சிட்னியில் துவக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங் கத்தின் ஆஸ்திரேலியா பிரிவு தொடக்க விழா சிட்னியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, எஸ் என் ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி லட்சுமி நாராயணசுவாமி தலைமை தாங்கி ஆஸ்திரேலியா பிரிவை துவக்கி வைத்து பேசினார்.

இதில், கல்லூரியில் பல்வேறு காலகட்டங்களில் பயின்று சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், கான்பெரா போன்ற பல்வேறு நகரங்களில் பணி புரிந்து கொண் டிருப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் இவ் விழாவில் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் கல்லூரியின் முதல்வர் அலமேலு, கல்லூரி தொழில்நுட் பகளங்களில் மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்பதை சுட்டிக் காட்டினார். இந்த மாணவர் சங்கத்தின் பிரிவு அமெரிக்கா ஐரோப்பா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடு களிலும் துவக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக, முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் வீணா ரமேஷ் ஆஸ்திரேலியா பிரிவு சங்கத்தின் உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். ஆஸ்திரேலியா பிரிவின் தலைவர் நளினி சாந்தகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img