தூத்துக்குடி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க புதிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது. சம்மேளன மாநிலத் தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். அலுவலகத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் -மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப் புத்துறை அமைச்சர் அனி தா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
கல்வெட்டை சங்க மாநில தலைவர் தங்கராஜ் திறந்து வைத்தார். சம்மேளன மாநில செயலாளர் தர்மராஜ், பொருளாளர் சிதம்பரம், கிருஷ்ணமூர்த்தி (சம்மேளன பைனான்ஸ் சேர்மன்), ராஜா (சம்மே ளன பைனான்ஸ் நிர்வாக இயக்குநர்), ராமசுப்பையா (மாவட்டத் தலைவர்) பி.டி.பிரேம்குமார் (மாவட்டச் செயலாளர்) ராதாகிருஷ்ணன் (மா வட்ட பொருளாளர்), சந்திரசேகர் (மாநில துணைத்தலைவர்) மற்றும் தூத்துக்குடி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள், தமிழ்நாடு தனியார் பேருந்து அனைத்து சங்க நிர்வாகிகள், விவேகம் பஸ் கம்பெனி உரிமை யாளர் ஆனந்த், ரமேஷ், ராம் பாப்புலர் பஸ் உரிமையாளர், ராஜா பஸ் உரிமையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.