பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு நன்னடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளது. இதையடுத்து தேனிமாவட்டம் கேரள மாநில எல்லை எல்லைப் பகுதிகளான குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு சோதனை சாவடிகள் மற்றும் பறக்கும் படைகள் மூலமாக தீவிர கண்காணிப்பு பணி மே ற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.
அதன்படி தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கும், கேரளா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் சரக்குவாகனம், ஜீப், கார், மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் கம்பமெட்டு மலைப் பாதையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பரிசு பொருட்கள், பணம் உள்ளிட்டவைகள் உள்ளனவா? என கண்காணித்து வருகின்றனர்.



