Homeபிற செய்திகள்உயிரித் தொழில்நுட்பம் குறித்து தேசிய கருத்தரங்கம்

உயிரித் தொழில்நுட்பம் குறித்து தேசிய கருத்தரங்கம்

பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் உயிரியல் அறிவியல் சிறப்பு மையம் சார்பில், DBT-CTEPஆதரவுடன் “BioE3-2026 – Sustainable Innovations for Entrepreneurship, Healthcare, Climate Action and Circular Economy” என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
தொழில்முனைவு, சுகாதாரம், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சுழல் பொருளாதார வளர்ச்சியில் உயிரித் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை எடுத் துரைக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், தொழில்
துறை வல்லுநர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மாநாட்டின் துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பி.ஹாரதி தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர், சமூக மற்றும் சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வுகாண ஆராய்ச்சி, புதுமை மற்றும் துறைசார் ஒருங்கிணைப்பின் அவசி யத்தை வலியுறுத்தினார்.
பெங்களூரு Institute of Bioinformatics and Applied Biotechnology (IBAB) நிறுவனத்தின் இயக்குநராகவும் Biocon Chair ஆகவும் பணியாற்றும் பேராசிரியர் டி.சுந்தர் சிறப்புரையாற்றினார். BioE 3 திட்டத்தின் மூலம் தொழில்முனைவு, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் உயிரித் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை விளக் கினார்.
மேலும், இந்திய அறிவியல் கழகம் (IISc), CSIR& தேசியகடலாய்வுநிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிகழகம் (ICMR) சவிதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கேரளா ஸ்டார்ட்அப் மிஷன் மற்றும் பல்வேறு உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களைப் பகிர்ந்தனர்.
மாநாட்டில் உயிரியல் பொருளாதாரம், சுகாதார உயிரித் தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் உயிரித் தொழில்நுட்பம், உணவு உயிரித் தொழில்நுட்பம், தொழில்துறை உயிரித் தொழில்நுட்பம், புத்தகம், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் இன்கியூபேஷன் உள் ளிட்ட தலைப்புகளில் தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெற்றன.
ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வுகளை வாய் மொழி மற்றும் போஸ்டர் வடிவில் வழங்கினார்.
நிறைவு விழாவில் சிறந்த வாய்மொழி மற்றும் போஸ்டர் ஆய்வுக் கட்டுரைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டன. இந்த இரண்டு நாள் தேசிய மாநாட்டில் பல்கலை க்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
உயிரித் தொழில்நுட்பத் துறையில் அறிவுப்பரிமாற்றம், ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் பயனுள்ள தளமாக இந்த கருத்தரங்கம் அமைந்தது.

படிக்க வேண்டும்

spot_img