அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன முன்னாள் நிர்வாக அறங்காவலரும் வேந்தருமான முனைவர் இராஜம்மாள் தேவதாஸின் 22ம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு திருச்சிற்றம்பலம் கலையரங்கில் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண கோயிலில் இசைத்துறையின் சார்பாக கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.
தொடர்ந்து நிறுவனத்தின் மனையியல் புலம் முதன்மையர் எஸ்.அம்சமணி வரவேற்புரை ஆற்றினார். அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் துணை நிர்வாக அறங்காவலர் கௌரிராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வை. பாரதி ஹரிசங்கர் வாழ்த்துரை வழங்கினார். உணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறையின் மேனாள் துறைத்தலைவர் மற்றும் புலம் முதன்மையர் முனைவர் சு.பிரேமகுமாரி சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டார்.



