கோவை கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பாக எல் அண்ட் டி என்ற பன்னாட்டு நிறுவனத்தின் ‘எக்ஸ்பீரியன்ஸ் என்ஜினியரிங்’ என்ற தொழில்நுட்ப அருங்காட்சியகம், சுமார் 8 கோடி மதிப்பில் நிர்மாணிக்கப் பட்டு தேசத்திற்காக அர்ப்பணிக்கும் விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தொழில்நுட்ப அருங்காட்சியகம் மற்றும் உயர் ஆய்வு மையத்தின் நோக்கம் இந்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்கில் இந்தியா’, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ போன்ற பல்வேறு தளங்களில் மாணவர்களை ஊக்குவிக்கவும், அவர்களுடைய திறமைகளை மேம்படுத்தி, தொழில்நுட்ப வடிவமைப்புகளை உருவாக்கி நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவாகும்.
விழாவில் கே.பி.ஆர். குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி, தேசத்திற் காக அமைக்கப்படும் இந்த உயர் ஆய்வு மையத்தை தக்க சமயத்தில் பயன் படுத்தி மாணவர்கள் பல்வேறு தலைசிறந்த வடிவ மைப்புகளை உருவாக்கி தேசத்திற்கும், உலகளாவிய பொறியியல் தொழில்நுட்ப சேவை கிடைக்குமாறு செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கல்லூரி முதல்வர் முனைவர் மு.அகிலா கூறும்போது, இந்த மையம் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கும், எதிர்காலத்தில் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர் களுக்கும், பொறியியலின் கருத்துகள், கோட்பாடுகள், தத்துவங்கள் போன்ற வற்றை டிஜிட்டல் முறையில் எளிமையான வகையில் விளக்கத்துடன் கற்றுத்தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக அமைக்கப்பட் டுள்ள இந்த மையம் எல் அண்ட் டி நிறுவனத்தின் நீண்ட கால பொறியியல் அனுபவங்களை டிஜிட்டல் முறையிலும் நிஜம் மாதிரிகள் மூலமாகவும் பொது மக்களும், பள்ளி மாணவர்களும் பயன் பெரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
சிறப்பு விருந்தினர் எல் அண்ட் டி என்ஜினியரிங் உற்பத்தி துறை துணைத் தலைவர் பால்குன் சோஷி பேசும்போது, உயர் ஆய்வு மையத்தை பார்வை யிடும் அனைவரும் தொழில் துறையின் உச்ச கட்ட தொழில்நுட்பங்களை கண் டிப்பாக காண முடியும் என்றார்.
டெல்லியில் இருந்து காணொலி மூலம் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளர் முனைவர் ஸ்ரீவாரி சந்திரசேகர் பேசும்போது, இந்திய பொறியாளர்களுக்கு உலக அரங்கில் பெரும் மதிப்பு உள்ளது. உற்பத்தித்துறை மட்டுமல்லாமல், ஆராய்ச்சித் துறையிலும் இந்திய பொறியாளர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.
சமீப காலமாக இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆராய்ச்சி, காப்புரிமைகள், ஆராய்ச்சி முனைவர் பட்டம் பெறுபவர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவதிலும், புதுமையை உருவாக்குவதிலும் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருவது பெருமை அளிக்கக் கூடியதாக உள்ளது.
மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சிக்காக பெரும் அளவில் நிதி உதவி செய்துள்ளது. கே.பி.ஆர் கல்லூரி மற்றும் எல் அண்ட் டி நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மையம் மாணவர்கள் பொறியியலை திறம்பட புரிந்து கற்றுக்கொள்ள இத்துறை சிறப்பாக செயல்பட உதவும் என்றார்.
எல் அண்ட் டி எடு டெக் நிறுவனத்தின் வர்த்தக பிரிவு
எல் அண்ட் டி எடு டெக் நிறுவனத்தின் வர்த்தக பிரிவு தலைவர் பெபின், கூறும் போது, நவீன தொழில் துறையின் தேவைகளை பாடத்திட்டத்தில் சேர்த்து ஒரு பொறியியல் மாணவரை பல்துறை வல்லுனராக்க வேண்டும் என்பதே ஆகும் என்றார்.
விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியகத்தின் இயக்குனர் சாதன அட்டாவர், நாஸ்காம் நிறுவனத்தின் துணை இயக்குனர் உதய் ஷங்கர் ஆகியோர் பேசினர்.
மையத்தை இலவசமாக பார்வையிட விரும்பும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் kpriet.ac.in/experience-engineering என்ற இணையதள முக வரியிலோ அல்லது 8870283186 தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து பார்வையிடலாம்.



