fbpx
Homeபிற செய்திகள்தமிழகத்திலேயே முதல் முறையாக 2 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணை 1792 பேருக்கு ரூ.5.75 கோடி...

தமிழகத்திலேயே முதல் முறையாக 2 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணை 1792 பேருக்கு ரூ.5.75 கோடி நலத்திட்ட உதவி

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1792 பயனாளிகளுக்கு ரூ.5.75 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே முதல் முறையாக இரு திருநங்கை களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, அரசின் அனைத்துத் திட்ட உதவிகளும், அனைவரையும் சென்று சேரும் வகையில் மக்கள் நலன் காக்கும் அரசாக, செயல்பட்டு வருகிறது.

தனிமனிதனின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறது. அனைத்து திட்டங்களும் தொய்வில்லாமல் நடக்க அரசு அதிகாரிகளுக்கு தொடர்ந்து அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

யார் யார்?
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமை ச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ரா மச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் 382 பயனாளிகளுக்கு ரூ.3,82,000/- மதிப்பிலான முதியோர், விதவை, ஆதரவற்றோர் உள்ளிட்ட உதவித்தொகைகளும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 90 பயனாளிகளுக்கு ரூ.7,82,000/- மதிப்பிலான திருமண உதவித்தொகைகளும், 3 பயனாளிகளுக்கு ரூ.3,00,000/- மதிப்பிலான விபத்து நிவாரணத்தொகைகளும், 2 பயனாளிகளுக்கு ரூ.2000/- மதிப்பில் தற்காலிக இயலாமைக்கான மாதாந்திர உதவித்தொகைகளும், 30 பயனாளிகளுக்கு ரூ.8,52,770/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 150 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளும், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபா ன்மையினர் நலத்துறையின் மூலம் 25 பயனாளிகளுக்கு ரூ.1,36,950/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களும், 25 பயனாளிகளுக்கு ரூ.1,21,750/- மதிப்பிலான இலவச தேய்ப்பு பெட்டிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ், 80 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகளும், 45 பயனாளிகளுக்கு ரூ.22.50/- இலட்சம் மதிப்பில் சமத்துவபுர குடியிருப்பு வீடு பராமரிப்பு பணிக்கான ஆணைகளும், 2 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 25 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் 25 பயனாளிகளுக்கு திறன் பேசி என ரூ.22.84 இலட்சம் மதிப்பிலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் 53 பயனாளிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட ஆணைகள் மற்றும் 47 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம் என ரூ.29.09 இலட்சம் மதிப்பிலும், தொழிலாளர் நலத்துறையின் மூலம் 50 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பில் ஓய்வூதிய ஆணைகளும், தாட்கோ மூலம் 100 பயனாளிகளுக்கு தூய்மைப் பணியாளர் அடையாள அட்டைகளும், 50 பயனாளிகளுக்கு ரூ.87 இலட்சம் மதிப்பிலான மானியத்தொகைகளும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சம் மதிப்பில் விதைப்புக்கருவி, சுழல் கலப்பை, புல் வெட்டும் கருவி உள்ளிட்ட வேளாண் உபகரணங்களும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.4,150/- மதிப்பிலான இடுபொருள்களும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.8,100/- மதிப்பிலான பழக்கன்று, காய்கறி விதைகள், இடுபொருள்களும், 3 பயனாளிகளுக்கு உழவர் சந்தையில் விற்பனை செய்வதற்கான அடையாள அட்டைகளும், 3 பயனாளிகளுக்கு ரூ.5.59 இலட்சம் மதிப்பிலான சூரிய ஒளியினால் இயங்கும் மோட்டார் கருவிகளும், மாவட்ட தொழில்மையம் மூலம் படித்த வேலையற்ற இளை ஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 7 பயனாளிகளுக்கு ரூ.3.92 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளும் மற்றும் கூட்டுறவுத்துறையின் மூலம் 585 பயனாளிகளுக்கு ரூ.1.50 கோடி மதிப்பிலான இணைப்பு கடன்களும் என மொத்தம் 1792 பயனாளிகளுக்கு ரூ.5.75 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

“கிடைத்தது ஓய்வூதியம்
நீங்கியது வறுமை”
இந்நிகழ்ச்சியில், அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்ற பயனாளிகள் தெரிவித்ததாவது:

எனது பெயர் முத்தம்மாள். அருப்புக்கோட்டை வட்டம், ஆலடிப்பட்டியில் வசித்து வருகிறேன். கணவர் இறந்து விட்ட நிலையில், தனியாக வசித்து வருகிறேன். உழைக்க இயலாத சூழ்நிலையில் உள்ளேன். பிள்ளைகள் திருமணம் முடித்து தனியாக சென்றுவிட்டனர்.

முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டால் பேருத வியாக இருக்கும் என்று மனுக் கொடுத்தேன். தகுதியான பயனாளி என்று அறிந்து முதியோர் உதவித் தொகை அனுமதித்து உத்தரவிட்டுள்ளனர். அதற் கான ஆணையை பெற்றுக் கொண்டேன். இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

“தலை நிமிர வழி கிடைத்தது”
தமிழகத்திலேயே முதல் முறையாக விருதுநகர் மாவட்ட அளவிலான ஊராட்சிகளுக்கான வள மையத்தின் தலைமையாளராக பணி நியமன ஆணை பெற்ற திருநங்கை சரண்யா, வள மையத்தின் உதவியாளர் கணினி/ இயக்குபவராக பணி நியமன ஆணை பெற்ற திருநங்கை ரம்யாஸ்ரீ ஆகியோர் தெரிவித்ததாவது:
பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளோம்.

இதன் மூலம் சமுதாயத்தில் மற்றவர்களை போல் தலைநிமிர்ந்து வாழ வழிவகை செய்த மாவட்ட நிர்வாகத்திற்கும், அமைச்சருக்கும், முதல்வருக்கும் என்றும் நன்றிக்கடன் உள்ளவராக இருப்போம் என்றனர்.

“போலியோவால் கால்களை இழந்தேன்
அரசு உதவியால் துன்பத்தை மறந்தேன்”
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், எண்டப்புலி கிராமத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி தெரிவித்ததாவது:

எனக்கு 28 வயதாகிறது. இரண்டு கால்களும் போலி யோவினால் பாதிக்கப்பட்டு சிறு வயது முதல் நடக்க முடியாது. திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கணவர் தினக்கூலி. நான் ஊரிலேயே பெட்டிக்கடை நடத்தி வருகிறேன்.

கடைக்கு தேவையான பொருட்களை வாங்க அருகிலுள்ள நகருக்கு தினமும் பேருந்தில் ஏறி இறங்கி செல்வதற்கு சொல்லொணாத்துயரம் அடைந்துள்ளேன். அடுத்தவர் களின் உதவியின்றி தினமும் வேலைக்கு சென்று வர இயலாது. இந்த சூழ்நிலையில் தான் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தேசிய அடையாள அட்டை எடுக்க சென்றிருந்தேன்.

அப்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் விலை யில்லா ஸ்கூட்டர் வழங்குவது அறிந்து மனு செய்தேன். மனு செய்த சில நாட்களில் அரசு விழாவில் பெட்ரோல் ஸ்கூட் டர் உடனடியாக 10 ரூபாய் கூட செலவில்லாமல் கிடைத்தது.
பதிவு செலவுகள் மற்றும் வாகன காப்பீட்டு செலவுகள் அரசின் மூலமாக இலவசமாக செய்து தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது எளிதாக கடைக்கு தேவையான பொருட்கள் வாங்க நகருக்கும், எனது பிள்ளைகளை பள்ளிக்கூடம் விட்டுவரவும் முடிகிறது. மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றிய அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

வெளியீடு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
விருதுநகர் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img