fbpx
Homeதலையங்கம்சேவை தான் உண்மையான மதம்

சேவை தான் உண்மையான மதம்

சேவைதான் உண்மையான மதம் என்று குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். அவர் தனது உரையில், சேவைதான் உண்மையான மதம். சேவையின் மூலம் கிடைக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை வேறு எதுவும் கொடுத்து விட முடியாது.

கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான விவசாயிகள், இளைஞர்களின் வாழ்வில் சேவை மற்றும் அறக்கட்டளைகள் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

நகர்ப்புறத்துக்கும், கிராமப்புறத்துக்கும் இடையேயான இடைவெளியை குறைக்க வேண்டிய தேவை இல்லை. விவசாயம் தான் நமது நாட்டின் அடிப்படை கலாச்சாரம். எனவே விவசாயத்தின் மீது நாம் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பத்ம விருதுகளை பொறுத்தவரை சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய உண்மையான திறமையுடையவர்களை அங்கீகரிக்கும் வகையில் புதிய பாரம்பரியம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சிறந்த பணிக்காக வெங்கய்ய நாயுடு அரசை பாராட்டியுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img