கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள, தமிழ்நாடு மின்சார வாரி யத்தின் தலைமை அலுவல கத்தில் நேற்று, தமிழ்நாடு, எலக்ட்ரிக்சிட்டி, போர்டு, எம்ப்ளாயீஸ், பெடரேஷன் அமைப்பின் சார்பில், வட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் சேக் கிழார் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் பணியாளர்களின் நலன் குறித்தும், அமைப்பின் வளர்ச்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் சேக்கிழார் கூறியதாவது;
புதிதாக ஆட்சி அமைத்துள்ள அரசிற்கும் தமிழக முதல்வருக்கும் வாழ்த்துக்களை தெரிவித் துக் கொள்கிறோம்.
தற்போதைய மின் வாரிய செயல்பாடுகள் பற்றி செயற்குழு உறுப் பினர் களின் விவாதத் திற்குப் பின்னர், மத்திய அரசு அறிவித்துள்ள 28 விழுக்காடு அகவிலைப் படியை தமிழக அரசும் 1-7-2021 முதல் வழங்கிட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்வது, மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் சுமார் 50,000த்திற்க்கும் மேல் உள்ளது.
இந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது போன்ற 27 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் அமைப்பின் மாநிலத் தலைவர் மணிகண்டன், மாநில பொருளாளர் பாஸ்டியன் ராஜ், மாநில மகளிரணி செயலாளர் பாரதி, கோவை மாநகர் ரவிச்சந்திரன், மற்றும் கணேசன், ஸ்ரீனி வாசன், ராஜேந்திரன், முருகவேல், மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



