கோவை கேஎம்சிஎச் மருத்து வமனையில் குழந்தைகளுக்கான இலவச புற்றுநோய் சிகிச்சை மைய பிரிவு துவக்க விழா நேற்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கோவை சரக டிஐஜி முத்துச்சாமி கலந்து கொண்டு இந்த மையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத் தார்.
இந்த நிகழ்ச்சியில் புற்று நோயிலிருந்து மீண்டு வந்த குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் நல மருத்துவத்த்தின் தலைவர் பேராசிரியர் பூமா, கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கேஎம்சிஎச் மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிச்சாமி மற்றும் பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் மருத்துவர்கள் கூறியதாவது: இந்தி யாவில் ஒவ்வொரு ஆண்டும் 70.000 குழந்தைகள் மற்றும் வயது வந்த சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இதில் பொதுவாக லுகேமியா எனப்ப டுகின்ற புற்றுநோய் ,மூளை புற்றுநோய் கட்டி, நணநீர் மற்றும் நரம்புகளில் ஏற்படும் புற்று நோய்க் கட்டிகள் குழந்தைப் பரு வத்தில் சிறுநீரகத்தில் உருவா கும் புற்றுநோய் கட்டிகள் போன்ற வைகள் காணப்பட்டு வருகின்றது.
வருவாய் அதிகம் உள்ள நாடுகளில் இந்த குழந்தைகளின் ஒருங்கிணைந்த சேவை வழியாக 80 விழுக்காடு, குழந்தைகள் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வருகின்றனர்.
குறைந்த நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் 15 முதல் 45 விழுக்காடு குழந்தைகள் மட்டுமே சிகிச்சை பெற்று குணம டைகின்றனர்.
அதிகமான குழந்தைகள் இறப்புக்கு காரணம் முன்கூட்டியே பரிசோதனை செய்த தவறுதல், நோய் முற்றிய நிலையில் நோய்க ளுக்கான சரியான சிகிச்சை முறை இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படாமல் கைவிடப்படுதல், போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தை உயிரிழப்புகள் அதிகம் ஆகிறது.
கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையில் உலகத் தரம் வாய்ந்த அதிநவீன புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் வசதிகள் உள்ளது.
11 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தில் முறையான அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம், உயர்தர சிகிச்சை, உயர்வகை கதிர்வீச்சு சிகிச்சை, போன்ற அதிநவீன வசதிகள் உள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் பல ஆயிரம் நோயாளிகள் மற்றும் குழந்தைகள் இங்கு வெற்றிகரமாக சிகிச்சை பெற்று புற்று நோயில் இருந்து மீண்டு உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.



