Homeபிற செய்திகள்ஈரோடு ஸ்டேட் வங்கியில் வீடு - கார் லோன் மேளா மூன்று நாட்கள் நடக்கிறது

ஈரோடு ஸ்டேட் வங்கியில் வீடு – கார் லோன் மேளா மூன்று நாட்கள் நடக்கிறது

ஈரோடு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரதான கிளை வளாகத்தில் வீடு மற்றும் கார் லோன் மேளா இன்று (செப்டம்பர் 2ம் தேதி) முதல் 4ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. தினமும் காலை 10மணி முதல் மாலை 6 மணி வரை இந்த லோன் மேளா நடைபெறுகிறது.


இதில் முன்னணி பில்டர்கள் மற்றும் கார் டீலர்கள் பங்கேற்க உள்ளனர். 6.70 சதவீதம் முதல் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. பிராசசிங் கட்டணம் இல்லாமலும் ஒரு சிலவற்றுக்கு மிக குறைந்த பிராசசிங் கட்டணமும் வசூலிக்கப்படும். இந்த லோன் மேளாவில் தேவையான ஆவணங்களுடன் வாடிக்கையாளர்கள் பங்கேற்று பயனடையுமாறு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.


வாடிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு லோன் மேளாவிலேயே கடனுக்கான அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் வரும் வாகனங்களை நிறுத்த இலவச பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.


நிபந்தனைகளுக்குட்பட்டு கடன்களை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் 94433 14360, 99402 53851, 94425 54051 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

படிக்க வேண்டும்

spot_img