fbpx
Homeதலையங்கம்பெற்றோர்கள் மகிழ்ச்சி

பெற்றோர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு என்பதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கல்லூரிகளும் நாளை திறக்கப்படுகின்றன.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவிய கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. 9 மாத இடைவெளிக்குப்பின் மீண்டும் கடந்த ஜனவரி 2021ல் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்காக மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இருப்பினும் இந்த ஆண்டும் மார்ச் மாதம் மீண்டும் 2ம் கட்டமாக கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இதன் காரணமாக மீண்டும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.

அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் கடந்த மாதம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பள்ளிகளை பொறுத்தவரையில் கீழ் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது பல மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து தமிழக பள்ளி, கல்லூரிகளும் செப்டம்பர் முதல் திறக்கப்பட உள்ளன. இதனால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img