முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் நகரில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் முன்னிலையில் தீயணைப்பு நிலையத்தை பார்வையிட்டு, குத்துவிளக்கேற்றி தமிழக முதல்வருக்கு நன்றி கூறினார்.
உடன் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர் சரவணபாபு உட்பட பலர் உள்ளனர்.



