fbpx
Homeபிற செய்திகள்லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் அறிமுகம்

லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் அறிமுகம்

லயன்ஸ் கிளப் கோயம்புத்தூர் கிங்ஸ் 2021-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் அறிமுக விழா, ஆவாரம்பாளையத்தில் உள்ள கோ இந்தியா கலை யரங்கத்தில் நடைபெற்றது.

இதில் 2021-22ம் ஆண்டிற்கான தலைவராக துரைசந்திரன், செய லாளராக அருணாச்சலம், பொருளாளராக செந்தில் குமார் ஆகியோர் பொறுப் பேற்றுக் கொண்டனர். ரியல் லயன்ஸ் மனிதா பிமான விருது எஸ்.பிரபாகரனுக்கு வழங் கப்பட்டது.

கோவிட்19-ன் போது பொதுமக்களுக்கு வழங்கப் பட்ட மருத்துவ சேவைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது. விரு தினை முன்னாள் மாவட்ட கவர்னர் எல்.தர் மராஜ் வழங்கினார்.

முன்னாள் மாவட்ட ஆளுநர் எம்.வேலுசாமி, டி.எஸ்.விஜயகுமார், சிஜிவி. கணேசன், எல்என்.வேணுகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஏற்பாடுகளை கோயம்புத்தூர் கிங்ஸ் லயன்ஸ் கிளப்பின் சேட்டர் தலைவர் டி.ஸ்ரீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார்.

கோவிட்19-ன் போது தேவைப்படுபவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக உணவு வழங்கியதற்காக பி.எம்.மாணிக்கம், ஒன். உதயம் சீனிவாசன் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img