fbpx
Homeபிற செய்திகள்60 வகையான வெரைட்டி கமகமக்கும் தோசைகள் கோவையில் இளைஞர் அசத்தல்

60 வகையான வெரைட்டி கமகமக்கும் தோசைகள் கோவையில் இளைஞர் அசத்தல்

கோவையில் இளைஞர் ஒருவர் 60 வகையான தோசை களைச் சுட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய பாண்டியன். சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த இவர், குஜராத்தில் தனது உறவினர் உணவகத்தில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு கோவை வந்தவர் பல்வேறு தொழில்கள் செய்து, பிறகு சாலையோர கடை ஒன்றை அமைத்துள்ளார்.ஜே.கே.பாண்டியன் தோசை கடை என்ற இந்தக் கடை தற்போது, தோசைகளுக்காகவே பெயர் பெற்றுள்ளது. இங்கு சாதாரண தோசை முதல் அறுபது வகையிலான தோசைகளை ஜெயபாண்டியன் தயாரித்து வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:-

சிறு வயதிலிருந்து உணவகத் தொழில் அறிமுகம் இருந்ததால் இந்த தொழிலை கையில் எடுத்துள் ளேன். நான், எனது அக்கா உட்பட ஐந்து பேர் குழுவாக இணைந்து இந்த தொழிலை நடத்தி வருகிறோம். எங்கள் கடை ஜிசிடி அருகே அமைந்துள்ளது. தினமும் 70 முதல் 80 தோசை கள் வரை விற்பனையாகி வருகிறது. காய்கறி மற்றும் முட்டையை மையப்படுத்தி தோசைகள் தயாரிக்கிறோம். மற்ற அசைவங்களை சேர்ப்பதில்லை.


வெஜ் பிரிவில், சாதா தோசை தொடங்கி மைசூர் மசாலா தோசை, புதினா ஆனியன் தோசை, மேகி தோசை, பாலக் பன்னீர் தோசை உள்ளிட்ட வகைகளும், முட்டையை வைத்து மைசூர் தோசை, புல் பாயில் தோசை உள்ளிட்ட வைகைகளும் தயாரிக்கப்படுகின்றன.

சாதாரண தோசை 20 ரூபாய் முதல் வெரைட்டி தோசை 60 மற்றும் 120 என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினமும் காலை இதற்கான பணிகளை மேற்கொள்வோம் பிறகு, மாலை நேரத்தில் கடை திறக்கிறோம். இரவு வரை மக்கள் வருகின்றனர். மாணவர்கள் இந்த தோசைகளை விரும்பி உண் கின்றனர். தொழிலை விரிவுபடுத்தி விரைவில் ரெஸ்டாரன்ட் அமைத்து அங்கு இன்னும் பல விதமான தோசைகளைப் பரிமாற வேண்டும் என்பதே எனது கனவு, என்று உறுதிபட தெரிவித்தார் ஜெய பாண்டியன்.

படிக்க வேண்டும்

spot_img