fbpx
Homeபிற செய்திகள்கலசலிங்கம் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 3552 மாணவ, மாணவிகள்

கலசலிங்கம் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 3552 மாணவ, மாணவிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் கலச லிங்கம் பல்கலையில் 38வது பட்டமளிப்புவிழா, வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இணை வேந்தர் டாக்டர் எஸ்.அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த், துணைத் தலை வர் எஸ்.அர்ஜுன் கலச லிங்கம், துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசு தேவன், எக்ஸ்க்யூட்டிவ் கவுன்சில் நிர்வாக உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

துணைவேந்தர் ஆண்ட றிக்கையில், கடந்த ஆண்டு பல்கலை பெற்ற உயர் தகுதிகளையும், மாணவர் கள் சாதனைகள், ஆசிரியர் கள் ஆராய்ச்சி வளர்ச்சி பற்றியும் விவரித்தார்.


பொறியியல், கட்டடக் கலை, தோட்டக்கலை, வேளாண்மை, அலைடு ஹெல்த் சயின்ஸ், கலை மற்றும் அறிவியல் இளங் கலை மாணவர்கள் 3048 பேருக்கும், முதுகலை மாண வர்கள் 470 பேருக்கும், ஆராய்ச்சித்துறை பி.ஹெச்.டி மாணவர்கள் 34 பேருக்கும் மொத்தம் 3552 மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள், கம்பெனி உயர் அதிகாரிகள், கார் டெக்னாலஜிஸ் கம்பெனி, ஆர்.கே.ராமச்சந்திரன், டெக் மேங்கோ கம்பெனி, எஸ்கே. ஜெயஸ்ரீ ஆகி யோர் பட்டங்களை வழங்கினர்.


முன்னதாக ரேங்க் எடுத்த 128 மாண வர்க ளுக்கு, பதக்கம்.சான்றிதழ், பட்டங்களை வழங்கினர்.

பட்டம் பெற்ற மாணவர் கள் எழுந்து உறுதிமொழி எடுத்தனர்.
விழாவில் இயக்குநர் கள், டீன்கள், துறைத் தலைவர்கள், பெற் றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பட்டமளிப்பு விழாக் குழு பேராசிரியர்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img