பூம்புகார் என்ற பெயரால் அழைக்கப்படும். தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம், 1973ல் துவக்கப்பட்டு, தொன்மையான கலைகளை பாதுகாப்பதோடு கைவினைஞர்களின் வாழ்கைத்தரத்தை மேம்படுத்தவதை தமது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலங்களில் பல கண்காட்சிகளை நடத்தி வருவதைப் போல இந்த ஆண்டும் கிருஷ்ண தரிசனம் கண்காட்சி மற்றும் விற்பனையை நேற்று (4ம் தேதி) கோவை பெரிய கடைவீதி பூம்புகார் விற்பனை நிலையத்தில் துவக்கி உள்ளது. வருகிற 16ம் தேதி முடிய தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி முடிய நடைபெறும்.
இக்கண்காட்சியில் கிருஷ்ணரின் திருவுருவம் கொண்ட பஞ்சலோகம், பித்தளை, சந்தனமரம், கருப்பு மற்றும் வெள்ளை உலோக சிலைகள், தஞ்சை ஓவியங்கள், காகிதக்கூழ், களிமண் பொம்மைகள், கொண்டபள்ளி பொம்மைகள். நூக்கமர உட்பதிப்பு வேலைப்பாடு, துணியில் வரைந்த ஒவியங்கள் மற்றும் எண்ணற்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



