தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின்படி விருதுநகர் வட்ட சட் டப்பணிகள் ஆணைக் குழு சார்பாக, நீதிமன்ற வளா கத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிபதி பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.
உடன் மாவட்ட உரிமையியல் நீதிபதி நிஷாந் தினி, குற்றவியல் நீதித்துறை நடுவர் ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மொத்தம் 527 வழக்கு கள் முடிக்கப்பட்டு ரூ.3,90,97,681க்கு முதிர்வு தொகைக்கு தீர்வானது.
மோட்டார் வாகன விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.87 லட் சத்திற்கான உத்தரவு ஆணையை சார்பு நீதிபதி பாலமுருகன் வழங்கினார்.
மேலும் அரசு பேருந்து விபத்தில் இறந்தவரின் குடும்பங்களுக்கு ரூ.44 லட்சததிற்கான உத்தரவு ஆணையை அவர் வழங்கினார்.
இதில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.



