இந்திய மருத்துவ சங்கம், கோயம்புத்தூர் நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி இணைந்து பொதுமக்களுக்கான சிறப்பு எலும்பு
பரிசோதனை மருத்துவ முகாமை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரி வளாகத்தில் நடத்தியது. முகாமை பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி மாவட்ட ஜி.எஸ்.டி ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில்குமார் மற்றும் ரத்தினம் கல்லூரி மேலாண்மைத் துறைத் தலைவர் கௌசல்யா தேவி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
மாவட்ட ஆளுநர் ராஜசேகர் தலை மையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாவட்ட ஆளுநர் மற்றும் இந்திய மருத்துவ சங்க முன்னாள் மாநில தலைவர் டாக்டர் பழனிசாமி, கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர்.
விழாவில், மாவட்ட முதல் துணை ஆளுநர் செல்வராஜ், மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் வழக்கறிஞர் சூரி. நந்தகோபால், ரத்தினம் கல்வி நிறுவனங்களின் சார்பில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம், துணை முதல்வர் சுரேஷ், ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டுத் துறை டீன் டாக்டர் சபரீஷ் மற்றும் அறிவியல் துறை டீன் டாக்டர் சீனி வாசன், வட்டார தலைவர் சுப்பு செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு நவீன எலும்பு அடர்த்தி பரிசோதனை மற்றும் நடை ஆய்வு ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கோஷல்ராம், அவசர கால அடிப்படை உயிர் காக்கும் முதலுதவி குறித்த செயல்முறை விளக்கத்தை அளித்தார்.
எலும்பு மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீ ராமலிங்கம் பொது மக்களுக்கு எலும்பு தொடர்பான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
முகாமிற்கான ஏற்பாடுகளை நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் செயலாளர்கள் பொறியாளர் தேஜஸ்வினி, திவ்ய தர்ஷினி மற்றும் பொருளாளர் செந்தில்குமார் செய்திருந்தனர்.



