fbpx
Homeபிற செய்திகள்5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் வழங்கினார்

5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் வழங்கினார்

ஓட்டபிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் பிறந்த நாள் தமிழக அரசின் ஒராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடந்தது

ஒன்றிய செயலாளரமான பஞ்சாயத்து தலைவர் இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம் நலன் மற்றும் கால்நடை பரா மரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பொது மக்கள் 5ஆயிரம் பேருக்கு அரிசி, தையல் இயந்திரம், சேலை, வேஷ்டி ஆகிய நலத்திட்ட உதவி களை வழங்கினார்.

மேலும் மாற்றுதிறனாளிகள் பள்ளிவகுப்பறைக்கு தேவையான ஸ்மார்ட் கிளாஸ் நடத்த எல்இடி டிவி, விளையாட்டு மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.

கராத்தே, கபடி, கிரிக்கெட் மற்றும் மாநில தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்தவர்கள் பாராட்டப்பட் டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து துறைகளும் வளர வேண்டும் என்ற வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கலைஞரின்ஆட்சிகாலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டன. இதுபோல் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிகாலத்திலும் பல்வேறு திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன. பெண் கள், ஏழை எளிய மக்கள் என அனைவருக்குமான அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது

அனைத்துதரப்பு மக்களையும் சமமாக பாதிக்கின்ற இந்தியாவி லேயே சிறந்த முதல்வராக மு.க. ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணைசெயலாளர் உமரி சங்கர், ஓட்டபிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், மாப்பிள்ளை யூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், செந்தூர் மணி, தூத்துக்குடி பகுதி ஒன்றிய செய லாளர்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய பல்வேறு அணிகளின் நிர் வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img